செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மருத்துவ காப்பீடு எடுக்கும் போது…!

மருத்துவ காப்பீடு எடுக்கும் போது…!

1 minutes read

மருத்துவமனை செலவுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற அனுபவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கவே செய்கிறது. மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் என 2 வகையில் கிடைக்கிறது.

தனிநபர் பாலிசியில் காப்பீடு செய்பவர் மட்டும் க்ளைம் செய்து கொள்ளலாம். குடும்பத்தினருக்கான புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் க்ளைம் செய்து கொள்ளலாம். திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக்கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். வயதான பெற்றோருக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால் இவர்களை புளோட்டர் பாலிசியில் சேர்க்காமல் தனிதனி தனிநபர் பாலிசி எடுத்துக்கொள்வதும் நல்லது. 3 மாத குழந்தை முதல் 86 வயது வரை இந்த பாலிசி அனுமதிக்கப்படுகிறது.

நமது மருத்துவ தேவைகளை பொறுத்து மருத்துவக் காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக்கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும். பாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப க்ளைம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்கு கொடுக்கப்படும்.

இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் காப்பீட்டு தொகையில் இருந்து மருத்துவ செலவுகளை கழித்துக்கொள்வார்கள். புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவை க்ளைம் செய்துகொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும்பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் க்ளைம் செய்து கொள்ளலாம்.

பாலிசி எடுப்பதற்கு முன் காப்பீடு நிறுவனத்திடம் சில விஷயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். முக்கியமாக பாலிசி எடுப்பதற்கு முன்பே சில நோய்கள் இருந்துவரலாம். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலத்திற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறக்கூடிய நோய்கள் ஆகியவற்றின் உண்மை தன்மைகளை மறைக்காமல் குறிப்பிட வேண்டும்.

சில பாலிசிகள் மருத்துவ செலவுகளை மட்டும் ஏற்பதாகக் குறிப்பிடும். மருத்துவமனை தங்கும் கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில் அதற்கும் கவரேஜ் கிடைக்க வேண்டும். மேலும் மருத்துவமனை தங்கும் கட்டணங்கள் நாள் ஒன்றுக்கு இவ்வளவுதான் என வரம்பு இருக்கும். இதில் அதிகபட்ச தொகை க்ளைம் ஆவது போல பாலிசி எடுத்துக்கொள்ளுங்கள்.

சில பாலிசிகளில் மருத்துவச் செலவுகளை நாம் செய்த பிறகு, ரசீதுகளை சமர்ப்பித்து க்ளைம் செய்து கொள்வதாக இருக்கலாம். இதற்கான காலம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முக்கிய மருத்துவமனைகள், அல்லது அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளுடன் காப்பீடு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொண்ட பிறகே மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும்.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.