Friday, September 17, 2021

இதையும் படிங்க

டி.வி பார்க்கும் குழந்தைகளின் அறிவாற்றல் திறன் அதிகரிக்கும்!

வாசிப்பு மற்றும் எழுதும் பழக்கத்தை குழந்தைகள் ஆர்வமாக தொடர்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் சில பெற்றோர் போதிய அக்கறை காண்பிப்பதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தாங்களாகவே வாசிக்க, எழுத...

கண்ணே கம்ப்யூட்டர் வேண்டாம்

குழந்தைகள் வளர தொடங்கியதும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அவற்றுள் பார்வை திறனுக்கு வலு சேர்க்கும் உணவுகளும் இடம்பெற வேண்டும்.

நுரையீரல் பரிசோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும்?

கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் எம்மில் பலருக்கு நுரையீரலின் முழுமையான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே...

கர்ப்பிணித்தாய் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

‘‘நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ, பிறந்த 48 மணி நேரத்துக்குள் குழந்தை கருப்பாக முதல் மலம் கழிக்க வேண்டும். இதுதான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அப்படி இல்லாவிட்டால் மலத்துவாரம்...

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் திரிகோண முத்திரை!

திரிகோண முத்திரை மேலேயுள்ள படத்தில் காட்டியுள்ளபடி விரல்களை இணைத்து 15 நிமிடங்கள் தினமும் செய்ய தீராத மலச்சிக்கல் பிரச்சனை தீரும், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும். மேலும் ஜீரண சக்தி...

வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு தரும் அற்புதமான கீரைவகை!

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும். https://youtu.be/s0JVv_R6GVo

ஆசிரியர்

அஜீரண உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகள்!

பழைய காலங்களில் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததில்லை. என்றைக்காவது வரும் பண்டிகை நாட்களில்தான் இட்லி, தோசையே கிடைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு தடுக்கி விழுந்தால் ஒரு நொறுக்குத்தீனி கடையில் முட்டும் அளவுக்கு கடைகள் பெருகிவிட்டன. நொறுக்குத்தீனி உண்பதும் கட்டுப்பாடு இல்லாமல் பெருகிவிட்டது.

ஏன் எல்லா நாட்களிலும் அளவுடன் உண்ண வேண்டும் என்பதை ஆயுர்வேதம் மாத்ராதீசியம் என்ற பெயரில் விளக்குகிறது. தக்க முறைப்படி உண்பதுதான் மாத்திரை. அளவை குறைத்தோ, கூட்டியோ உண்ணக் கூடாது. அஜீரணத்தை ஏற்படுத்தும் உணவை பற்றி நினைக்கவும் கூடாது; நன்மை பயக்கும் உணவையும், கெட்ட உணவையும் சேர்த்து உண்ணக் கூடாது; ஒரு முறை சாப்பிட்ட உணவு செரிமானம் அடைவதற்கு முன்பு உண்ணக் கூடாது.

உணவின் அளவை பொறுத்து உடலில் இருக்கின்ற ஜடாராக்னி வேலை செய்கிறது. ஒருவருடைய செரிக்கும் சக்தியான அக்னியின் பலத்தை பொறுத்து, உணவின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. எந்த அளவு உணவு இயற்கையாக உடலை கெடுக்காமல், உரிய காலத்தில் ஜீரணமாகிறதோ அது ஒருவருக்கு தேவையான உணவாகும். அக்னியின் தன்மைக்கேற்ப உணவை உண்ண வேண்டும்.

அக்னியின் பலத்தை பொறுத்தே, மனிதனின் பலம் உருவாகிறது. அதன் அடிப்படையிலேயே நம்முடைய செயல்பாடுகள், வேலைகள் அமைகின்றன. செரிக்க கடினமான, கனமான உணவுப் பொருட்களை, செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அரை வயிறு உண்டுவிட்டு நிறுத்திவிட வேண்டும். இலகுவான உணவுப் பொருட்களை சற்று கூடுதலாக சாப்பிடலாம். உண்ட உணவு, தக்க காலத்தில் தீங்கு செய்யாமல் செரிக்க வேண்டும்.

உணவின் அளவை மிகவும் குறைத்து உண்டால் உடலின் பலமும், பொலிவும் குறையும், வாத நோய்கள் உண்டாகும். உண்ட உணவு செரிக்காமல், வாந்தி ஆகாமல், மலம் ஆகாமல் மந்தமாக உடலில் தங்கி இருக்கும். சில நேரங்களில் வயிற்றை ஊசியால் குத்துவது போன்று காணப்படலாம். வயிற்று வலி, வயிற்று பொருமல், தலைவலி, தலைச்சுற்றல், விரைப்பு, வாந்தி, சளி உருவாதல் போன்றவை காணப்படும். பலம் குறையும், இவற்றுக்கு `ஆமம்’ என்று பெயர்.

தகாத உணவை, கூடாத உணவை அளவுக்கு அதிகமாக உண்டால் அது விஷத்தன்மை பெறும். பழைய காலத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு வசம்பு, இந்துப்பு ஆகியவற்றைக் கொடுத்து வாந்தி வரச் செய்வார்கள். இலகுவான அரிசி கஞ்சியைக் கொடுப்பார்கள். அஜீரண நிலையில் மருந்து கொடுக்க மாட்டார்கள், தானாக உபவாசம் இருந்து செரிக்க விடுவார்கள். பிறகு செரிப்பதற்கான மருந்துகளைக் கொடுப்பார்கள்.

இந்த செமிக்காத உணவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை பொறுத்து சிகிச்சை மாறும். குறைந்த நிலையில் இருந்தால் உபவாசம் இருப்பது நல்லது. நடுநிலையில் இருந்தால் உபவாசத்துடன் பக்குவ தன்மையுடைய மருந்து தரலாம். மிக அதிகமாக இருந்தால் தோஷங்களை வெளியேற்றும் சிகிச்சை செய்வார்கள்.

எப்போதும் உடலுக்கு பழக்கமான, ஒத்துக்கொள்ளக்கூடிய, சுத்தமான, நன்மை தரக்கூடிய உணவை மனதை ஒருநிலைப்படுத்தி உண்ண வேண்டும். அவசரமாகவும் இல்லாமல், சோம்பலாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய நெய்ப்பு, உஷ்ணமுடைய, இனிப்பு, அறுசுவை உணவை உண்ண வேண்டும். குளித்துவிட்டு, அமைதியான மனநிலையுடன் உணவைச் சாப்பிட வேண்டும்.

உணவு சற்று திரவமாக இருக்க வேண்டும். அதிகமாக தயிர், சமைக்காத முள்ளங்கி, உளுந்து, சிறுகடலை, மாவு பண்டங்கள், சர்க்கரை பாகு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பலாப்பழம், மாம்பழம் முதலியவை எளிதில் ஜீரணமாகாது.

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

புடவை கட்டினால்… நோய் எதிர்ப்பு சக்தி!

சேலை கட்டும் பெண்களிடம் வாசம் மட்டுமல்ல… மிகப்பெரிய பொக்கிஷமும் இருக்கிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் மகா ஜனங்களே! கோவிட் பெருந்தொற்றுக்...

முதுகு வலி வராமல் தடுக்கும் பர்வட்டாசனம்!

பஞ்சபூத முத்திரை முடித்தவுடன் பர்வட்டாசனம் செய்யவும். விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதலில் வலது காலை தொடையில் போட்டு அதன் மேல் இடது காலை வைத்து படத்தில் உள்ளது போல் பத்மாசனம்...

மாத்திரைகளை இரண்டாக உடைத்து சாப்பிடலாமா ?

மருத்துவரிடம், மாத்திரைகளை இரண்டாக உடைக்கலாமா என்று உறுதி செய்து கொள்வது நல்லது. ஏனெனில் மாத்திரைகளை உடைக்கும் போது, அவற்றின் அளவு வேறுபடுகிறது…

நமது உணவில் இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால் கொரோனா வைரசை எதிர்கொள்ளலாம்

நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது.நமது உடலில் தினமும் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின்...

இதமான இரவு தூக்கத்திற்கு 10 வழிகள்

பெட்ரூமில் செய்யக் கூடிய இந்த மாற்றமும் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை அளிக்கலாம். இரவு நிம்மதியான தூக்கத்திற்கு இந்த 10 வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

கோவிட் காலத்தில் அதிகரிக்கும் குழந்தையின் உடல் எடை! தீர்வு என்ன?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களை தன் வசம் ஈர்த்தவர்.

சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா?

ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார். மீண்டும்...

உள்ளூராட்சி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் குறித்த அறிவிப்பு!

விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் நாளைய தினம் (சனிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர்,...

மேலும் பதிவுகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.09.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம்...

இரட்டை கோபுரம் தகர்ப்பு 20ம் ஆண்டு நினைவு தினம்: 9/11 தாக்குதல் நடந்த 3 இடங்களில் பைடன் அஞ்சலி!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரண்டு விமானங்களை மோதி...

இலங்கையில் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான தகவல் வெளியானது!

சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகளை விரைவாக திறப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடத்திவருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற...

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் லசித் மலிங்கா!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தனது அபார பந்து வீச்சால் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தார். நேர்த்தியான யார்க்கர் பந்து வீச்சால் நட்சத்திர பேட்ஸ்மேன்களையும் திணற வைத்தவர்....

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு தடுப்பூசி!

மக்கள் தொகையில் 50% பேருக்கு கொவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்கியிருப்பது நமது நாடென்ற வகையில் எமக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். இந்த வெற்றியில் நாம் அனைவரும் வீரர்கள்....

21 ஆம் திகதி ஊரடங்கு தளர்வு? இறுதி தீர்மானம் குறித்த அறிவிப்பு வெளியானது!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்து நாளை(வெள்ளிக்கிழமை) தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிந்திய செய்திகள்

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது

99 ஆவது ‍தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம்  திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர்...

ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழிநுட்ப கூடம் கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கூடத்தின் திறப்பு...

மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்?

நாட்டில் இன்று முதல் மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான போலி செய்தியை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும்  உள்ள மதுபானக் கடைகளின் முன் பொது மக்கள் மதுபானம்...

துயர் பகிர்வு