Friday, September 17, 2021

இதையும் படிங்க

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

புடவை கட்டினால்… நோய் எதிர்ப்பு சக்தி!

சேலை கட்டும் பெண்களிடம் வாசம் மட்டுமல்ல… மிகப்பெரிய பொக்கிஷமும் இருக்கிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் மகா ஜனங்களே! கோவிட் பெருந்தொற்றுக்...

உள்ளூராட்சி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் குறித்த அறிவிப்பு!

விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் நாளைய தினம் (சனிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர்,...

வடக்கில் இம்மாதம் இதுவரை 230 பேர் கோவிட் தொற்றால் பலி!

செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 865 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.2 கோடியை தாண்டியது!

வாஷிங்டன்,உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன்...

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக...

ஆசிரியர்

கருச்சிதைவிற்கு பிறகு கவனத்தில் கொள்ள வேண்டியவை

கருச்சிதைவின் போது அதிக ரத்தப்போக்கு, இரும்பு சத்து இழப்பு, வைட்டமின் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதனை ஈடு செய்ய உணவு பழக்கவழக்கத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

தாய்மையை எதிர்கொண்டு கருவை சுமக்கும் பெண்களுக்கு சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக கருச்சிதைவு நிகழ்ந்துவிடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15.6 மில்லியன் கருச்சிதைவுகள் நடைபெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் தினமும் 10 பெண்கள் பாதுகாப்பற்ற கருச்சிதைவு காரணமாக இறக்கும் அபாயமும் இருக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கான பெண்கள் நோய் பாதிப்புகளையும் எதிர்கொள்கிறார்கள்.

குழந்தையை இழந்ததை நினைத்து மன வேதனைக்கு ஆளாகிறார்கள். அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமானது. கருச்சிதைவின் போது அதிக ரத்தப்போக்கு, இரும்பு சத்து இழப்பு, வைட்டமின் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதனை ஈடு செய்ய உணவு பழக்கவழக்கத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

* புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது அவசியம். அவை ரத்த செல்களை அதிகரிக்கச் செய்யும். அவித்த முட்டை, மீன், அவகொடா, பாலாடை, பட்டாணி, ஆரஞ்சு, கேரட், பச்சை இலை காய்கறிகள், வாழைப்பழம், பாதாம் போன்றவற்றில் புரதம் அதிகம் கலந்திருக்கும்.

* எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. முள்ளங்கி, முலாம்பழம், ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிடக் கூடாது. சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.

* மீன், கோழி இறைச்சி, முட்டை, ஆட்டு இறைச்சி, ஈரல், பழங்கள், காய்கறிகளை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவர்கள், மீன், கோழி, ஆட்டு இறைச்சி ஆகியவற்றை விரும்பி சாப்பிடலாம். இவற்றுள் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி நிறைந்திருக்கிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

* குறைந்த அளவு கொழுப்பு கொண்ட பால் பொருட்களை உட்கொள்ளலாம். அவற்றின் மூலம் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெறலாம். புரதம், வைட்டமின்கள் போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்திருக்கும்.

* காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இறைச்சி உணவுகளிலும் அதிகம் காரம் சேர்க்கக்கூடாது.

* கருச்சிதைவிற்கு பிறகு, அதிகமாக வியர்வை வெளியேறக்கூடும். நீரிழப்பும் ஏற்படும். அதனை தவிர்க்க தினமும் 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கும், உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் வெதுவெதுப்பான நீரை உட்கொள்ளலாம்.

* உலர்ந்த பழங்கள், இஞ்சி, பூண்டு, எள், பால் ஆகியவற்றை உட்கொள்ளலாம். கருச்சிதைவு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், உடல் நிலையை மோசமாக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ‘ஜங்க் புட்ஸ்’, சர்க்கரை சார்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும். அத்துடன் உருளைக்கிழங்கு, சுரைக்காய் போன்ற உடலை குளிர்விக்கக் கூடிய உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

* துணி துவைத்தல், தண்ணீர் வாளிகளைத் தூக்குதல் போன்ற எடை தூக்கும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.

* கருச்சிதைவுக்குப் பின் ஏற்படும் வலி அல்லது பிடிப்பை குறைக்க சூடான கடுகு அல்லது எள் எண்ணெய்யை தடவலாம். அத்துடன் உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கு, கை, கால்கள், உள்ளங்கைகளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம்.

* கருச்சிதைவுக்குப் பிறகு, உடலில் பிடிப்புகள் இருக்கலாம். ‘ஹாட் பேக்’ எனப்படும் சாதனத்தை பயன்படுத்துவது வலியை குறைக்க உதவும்.

* கருச்சிதைவுக்கு பின்பு உணர்ச்சிவசப்பட்ட மனச்சோர்வை அனுபவிக்கக்கூடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆறுதல், மனச்சோர்வை குறைக்க உதவும்.

* மருத்துவரின் ஆலோசனையின்படி உடலில் ஆற்றலை மீட்டெடுக்க உதவும் இரும்பு, கால்சியம் மற்றும் பிற அடிப்படை வைட்டமின்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* மரபணு பிரச்சினைகளால் கருவில் ஏற்படும் குறைபாடு, கர்ப்பப்பையில் ஏற்படும் சில குறைபாடுகள், தாய்க்கு நோய் பாதிப்பு ஏற்படுதல், அதிக உடல் எடை, நீண்ட தூர பயணம், அடிக்கடி பயணம் செய்தல், அளவுக்கு அதிகமான டென்ஷன், மன அழுத்தம் போன்ற காரணங்களால் கர்ப்பம் தானாகவே கலையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

* கருச்சிதைவுக்கு பிறகு அடுத்த கர்ப்பத்திற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இடைவெளி தேவை. இது ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும். கருப்பையில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும் வழிவகுக்கும்.

* ரத்த இழப்பு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, மாதவிடாய் சுழற்சி தாமதமாகலாம். உடல் நலத்தை கவனித்துக்கொள்வதை பொறுத்து மாதவிடாய் சுழற்சி அமையும். சிலருக்கு கருச்சிதைவுக்கு 2-3 மாதங்களுக்கு பிறகு மாதவிடாய் சுழற்சி தொடங்கலாம். எனவே பீதி அடையவேண்டாம். மிகவும் காலதாமதமானால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

* உடல் நலத்தை பேணுவதற்கு வழக்கமான பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ளுங்கள். கருச்சிதைவு என்பது வேதனை தரும் விஷயம். அதனை தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவது அவசியமானது.

இதையும் படிங்க

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழிநுட்ப கூடம் கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கூடத்தின் திறப்பு...

மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்?

நாட்டில் இன்று முதல் மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான போலி செய்தியை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும்  உள்ள மதுபானக் கடைகளின் முன் பொது மக்கள் மதுபானம்...

மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதி இல்லை!

மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க...

தொடர்புச் செய்திகள்

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கை – சுவிட்சர்லாந்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை சுவிஸ் சர்வதேச விமான...

விராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு – அதிர்ச்சியில் இரசிகர்கள்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தான் ஓய்வுபெறவுள்ளதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கைதியான நடராசா குகநாதன் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால்  (16.09.21 )இன்று விடுதலைசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு...

மேலும் பதிவுகள்

மலேசியாவில் 15 ஆயிரம் ஆவணங்களற்ற குடியேறிகள் கைது!

மலேசியாவில் கடந்த மே 2020 முதல் 2021 செப்டம்பர் 7 வரை 15,754 ஆவணங்களற்ற குடியேறிகள், 1,148 படகோட்டிகள், 781 கடத்தல்காரர்கள் Operation...

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பரத் திரைப்படம்

ஷரங் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள லொஹான் ரத்வத்தேயின் திமிர் பேச்சு

அரசியல் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தனக்கு பைத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நோர்வே பாராளுமன்ற உறுப்பினராக இலங்கை வம்சாவழி தமிழ்ப் பெண் தெரிவு

இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கம்சாயினி குணரட்ணம் நோர்வேயில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

உலகப்புகழை ஈட்டியுள்ள யோஹானிக்கு நாமல் வாழ்த்து

பாடல் ஒன்றின் மூலம் உலகப் புகழை ஈட்டியுள்ள யோஹானி டி சில்வாவிற்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சந்திமலின் அரைச்சதம் வீண்! முதல் போட்டியில் வென்ற தென்னாபிரிக்கா முன்னிலையில் !

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3 போட்டிகள்...

பிந்திய செய்திகள்

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது

99 ஆவது ‍தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம்  திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர்...

துயர் பகிர்வு