1
குறட்டை தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில டிப்ஸ், இதோ:-
- உடல் எடை குறைக்கவும்: உடற்பருமன் உள்ளவர்கள் குறட்டை விட அதிக வாய்ப்புண்டு. தொண்டை பகுதியில் கொழுப்புத் திசு மற்றும் நலிவான தசை இருந்தால் குறட்டை ஏற்படும். எனவே உடல் எடை குறைப்பது அவசியமாகும்.
- மது அருந்தக்கூடாது: தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டை ஏற்பட காரணமாக அமைவதால் மது அருந்துவதை தவிர்க்கவும்.
- பக்கவாட்டில் படுக்கவும்: நேராக படுத்தால் குறட்டை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. எனவே, பக்கவாட்டில் படுக்கவும்.
- பழங்கள்: உணவில் மெலடோனின் அதிகம் எடுத்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம். எனவே, மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், அன்னாசிப் பழம், கமலாப்பழம் ஆகியவை சாப்பிடலாம்.
- தலை உயர்த்தி படுக்கவும்: தலையணைகள் கொண்டு தலையை உயர்த்தி வைத்து தூங்கவும். தலையை உயர்த்தி வைத்து தூங்கினால் சீராக சுவாசிக்கலாம்.
- புகை பிடிக்காதீர்: சுவாசப்பாதையில் எரிச்சல் உண்டாக்குவதால் புகை பிடிப்பதை தவிர்க்கவும். புகை பிடித்தால் குறட்டை தொல்லை அதிகரிக்கும்.
- தேன், இஞ்சி தேனீர்: எச்சில் சுரக்க செய்வதால் இஞ்சி தொண்டைக்கு இதமளிக்கும். தினமும் 2 முறை தேன், இஞ்சி தேநீர் அருந்தினால் குறட்டை தொல்லை குறையும்.
- தூக்க மாத்திரை வேண்டாம்: அதிகமாக தூங்கினால் குறைட்டை ஏற்படும். எனவே, தூக்க மாத்திரைகளை தவிர்க்கவும்.
- பால் குடிக்கலாம், ஆனால்… பால் மற்றும் பால் பொருட்கள் தொண்டை மற்றும் நாசியில் வீக்கம் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும். பால் குடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க தேவையில்லை. இருப்பினும், தூங்கும் முன் பால் அருந்த வேண்டாம்.
- தண்ணீர்: உடலில் நீர் பற்றாக்குறையால் சளி உண்டாகிறது. இதனால் கூட குறட்டை ஏற்படலாம். ஆண்கள் நாளொன்றுக்கு 3.7 லிட்டர், பெண்கள் 2.7 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.