நீடிக்கும் நட்பு : ராஜ்யசபா தேர்தலில் கனிமொழியும் வெற்றிநீடிக்கும் நட்பு : ராஜ்யசபா தேர்தலில் கனிமொழியும் வெற்றி

இலங்கை விவகாரத்தினால் காங்கிரசுடன் இருந்த உறவை விட்டு எட்டநின்ற தி மு க தமது உறவை மீண்டும் புதுப்பித்துள்ளது. கடந்த முறை நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆளும் தி மு க படுதோல்வி அடைந்ததின் பின்னணியில் காங்கிரசுடனான கூட்டாட்சியும் காரணம் என்பதால் சற்று எட்ட நின்றது. மீண்டும் இன்றைய தேர்தலுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் தி மு க வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு வழங்கியதும் கனிமொழி காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கு நேரில் நன்றி தெரிவித்ததும் அரங்கேறியுள்ளது.

இந்திய நாடாளுமன்ற மேலவைக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆறு இடங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இன்று சென்னை கோட்டையில் நடைபெற்ற தேர்தலில் தி மு க வில் கனிமொழி வெற்றிபெற்றுள்ளார்.   ஏழு பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் போட்டியிட்ட நான்கு அ தி மு க வேட்பாளர்களும் அதிகூடிய வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றனர். அ தி மு கஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரும்  காங்கிரஸ் ஆதரவுடன் தி மு க விலிருந்து கனிமொழியும் வெற்றிபெற்றுள்ளனர்.

வெற்றி பெறுவதற்கு 34 வாக்குகள் தேவையாக இருந்தபோதும் கனிமொழி 31 வாக்குகளையே பெற்றுள்ளார் ஆயினும் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டியுள்ளதால் கனிமொழிக்கு வெற்றி கிட்டியுள்ளது.

ஆசிரியர்