தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் நெல்சன் மண்டேலாதொடர்ந்தும் ஆபத்தான நிலையில் நெல்சன் மண்டேலா

தென் ஆபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஆபத்தான நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் உள்ளார். நுரையீரலில் ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த போதிலும் இம்முறை சற்று ஆபத்தான கட்டத்தில் உள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக மக்களால் நேசிக்கப்படுகின்ற 94 வயது நிரம்பிய இந்த மகத்தான மக்கள் தலைவருக்காக தென்னாபிரிக்க மக்கள் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்கள். இனவெறி அரசுக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா தனது வாழ்வில் 27 வருடங்கள்  சிறையில் வாழ்ந்தவர். தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பு இன அதிபராக 1990ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றி தென் ஆபிரிக்க மக்கள் விடுதலைப் போராட்டத்தில் வெற்றிகண்டவர்.

தனது பதவிக்காலத்துக்குப் பின்னர் குறிப்பாக 1999ம் ஆண்டுக்குப் பின்னர் பொதுத்தொண்டு செய்வதிலும் உலக சமாதானத்தை உருவாக்குவதிலும் காலத்தைக் செலவிட்டார்.

ஆசிரியர்