கனடா தினம் ஒவ்வொரு வருடமும் ஜூலை 1ம் திகதி கொண்டாடப்படுகின்றது, லண்டன், நியூ யோர்க் மற்றும் சிட்னி போன்ற நகரங்களிலும் இம்முறை கொண்டாடப்பட்டுள்ளன.
கனடாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கொண்டாடப்பட்ட போதிலும் தலைநகர் ஒட்டாவாவில் மிகப்பிரமாண்டமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சுமார் 300,000 மக்களுக்கு மேல் இவ் விழாவில் பங்கு பற்றினர். கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இவ் விழாவில் கலந்துகொண்டு மிக உற்சாகமாக உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.