லண்டன் தமிழ் நிலைய பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றதுலண்டன் தமிழ் நிலைய பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது

லண்டன் தமிழ் நிலையம் நடாத்தும் தமிழ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று மேற்கு லண்டனில் உள்ள Watersmeet அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மற்றும் நுண்கலை அறிவை லண்டனில் வளர்த்துவரும் இப் பாடசாலையின் 23 வது பரிசளிப்பு விழாவில், கல்வியில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கேடையங்களும் வழங்கப்பட்டன.

பாடசாலை அதிபர் டாக்டர் அனந்தசயனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றன. குறிப்பாக பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு போன்ற நாடகங்கள் வரவேற்பைப் பெற்றன.

இலக்கியச்சுவையுடைய நாடகமாக குயில் பாட்டு இடம்பெற்றமையும், இலக்கியத்தில் இருந்து சிறு குறிப்பினை இவ்வளவு அழகியலாக காண்பிக்கலாம் என்பது இவ் நாடகத்தில் பங்குபெற்ற மாணவர்களினதும் நெறியாள்கை செய்த ஆசிரியரினதும் திறமையைக் காட்டுகின்றது. குறிப்பாக குயிலாக நடித்த மாணவி தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு வணக்கம் LONDON தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

DSC_9668

ஆசிரியர்