இலங்கையில் அதிகரிக்கும் கொள்ளை முயற்சிகள் இலங்கையில் அதிகரிக்கும் கொள்ளை முயற்சிகள்

கடந்த காலங்களில் நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் களவு நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதும் குறிப்பாக வடக்கு கிழக்கில் கூடுதலாக காணப்படுவதும் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. நாவலப்பிட்டி, பலாந்தோட்டை பிரதேசத்தில் பகல் வேளையில் வீட்டில் தனிமையாக இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலி, காதணி மற்றும் அவரது கையை வெட்டி மோதிரம்போன்ற தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

மேலும் வவுனியாவில் வர்த்தக நிறுவனத்தின் சுவரினை உடைத்து பெறுமதியான பொருட்களும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவ் வர்த்தக நிலையம் வவுனியா போலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்பாணத்தில் குருசோ வீதியிலும் ஒரு பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கடந்த சில நாட்களில் நடைபெற்ற கொள்ளைச்சம்பவங்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் இன்றும் மக்கள் இரவு நேரங்களில் நடமாட பயந்த நிலையில் காணப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.

ஆசிரியர்