வடமாகாண சபை தேர்தல் : கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல் வடமாகாண சபை தேர்தல் : கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல்

இலங்கையில் மட்டுமன்றி உலகின் முக்கிய பல நாடுகளிலும் உன்னிப்பாக அவதானிக்கப்படும் அரசியல் நகர்வாக வடமாகாண சபை தேர்தல் அமைந்துள்ளது. சர்வதேசத்தின் அழுத்தத்தால் இவ் ஆண்டிலேயே தேர்தல் நடைபெறப்போகின்றது. அதே சர்வதேசம் இதற்கான அதிகாரங்களையும் பெற்றுத்தருமா என்ற கேள்வியுடன் தமிழர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.

நீண்ட ஆலோசனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சருக்கான வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை நிறுத்தியுள்ளது. இம் முடிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது கூட்டமைப்புக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

வடக்கில் உள்ள 5 மாவட்டங்களிலும் எதிர்வரும் திங்கள்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட் டமைப்பின் முக்கிய தலைவர்கள் திங்கள்கிழமை தமது பிரச்சார வேலைகளை யாழ்பாணத்தில் ஆரம்பிப்பார்கள் என அறிவித்துள்ளனர்.

ஆசிரியர்