இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியமானது என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியமானது என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் இன்னமும் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவில்லையென்று குறிப்பிட்டுள்ள ஐ.நா சபை, ஊடக அடக்குமுறை தொடர்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியமானது என்றும் ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூனின் பேச்சாளர் மார்ட்டீன் நென்கீயிடம், “இன்னர் சிற்றி பிரஸ்” எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஊடக சுதந்திரம் தொடர்பில் பெரியளவில் சர்ச்சைகள் நிலவி வருகின்றன. ஊடக சுதந்திரம் மிகவும் அவசியமானது. அடக்குமுறைகள் எதுவுமின்றி சுதந்திரமான முறையில் தங்களின் கடமைகளை மேற்கொள்ள ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா செயலரின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். கடந்த காலங்களில் அதிகளவான ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்