உலகத்தமிழர்களை புண்படுத்துமா மெட்ராஸ் கபே திரைப்படம்?உலகத்தமிழர்களை புண்படுத்துமா மெட்ராஸ் கபே திரைப்படம்?

இன்று வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளியிடப்படுகின்ற மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு உலகத்  தமிழர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு வெளிப்பட்டமை எல்லோரும் அறிந்த விடையம். இந்தியாவில் தமிழ் தேசிய ஆர்வலர்களும் சில அரசியல் கட்சிகளும் தமது கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் தமிழ் நாட்டில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்ற முடிவுடன் உள்ளார்கள்.

பிரித்தானியாவிலும் நேற்று மாலை இந்திய திரைப்படங்களை வெளியிடும் திரையரங்குகளை கொண்ட சினிவோர்ல்ட் நிறுவனத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாடமொன்றை தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் நாட்டிலும் பிரித்தானியாவிலும் இன்று இத் திரைப்படம் திரையிடப்படுமா என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

இத்திரைப்படத்தில் நடித்த தமிழ்த்திரையுலக நடிகர் அஜய் ரத்னம் மீது அனைத்து தமிழர்களும் கண்டனமும் வெறுப்பும் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியும் விடுதலிப்புலிகள் அமைப்பு பற்றியும் தவறான கருத்துக்களை இத்திரைப்படம் உள்ளடக்கியுள்ளது என்பதே தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு காரணமாகும்.

கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதனை முன்னின்று நடாத்திய விடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழர்களின் அடையாளமாக கருதப்படுகின்றது. அதனை எச் சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுப்பதற்கு தமிழர் தரப்பில் யாரும் தயார் இல்லை என்பதனை இது சுட்டிக்காட்டுகின்றது.

cw2

cw1

cw3

ஆசிரியர்