நாளை சனிக்கிழமை லண்டன் O2 அரங்கத்தில் நடைபெற உள்ள இசைஞானி இளையராஜாவின் மாபெரும் இசைநிகழ்வுக்காக இளையராஜா தனது குழுவினருடன் லண்டன் வந்து சேர்ந்துள்ளார். இவர்களுடன் உலக நாயகன் கமலஹாசனும் லண்டன் வந்து சேர்ந்துள்ளார்.
இவ் நிகழ்வு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பொன்று நேற்று மாலை Lyca-Mobile நிறுவன தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இப்பத்திரிகையாளர் சந்திப்பில் Lyca-Mobile நிறுவன தலைவர் சுபாஸ்கரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.