சுனாமி தொலைத்த சிறுமி மீண்ட அதிசயம் சுனாமி தொலைத்த சிறுமி மீண்ட அதிசயம்

இந்தோனேசிய நாட்டில் சுனாமியில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட சிறுமி ஒருவர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பெற்றோருடன் இணைந்தார்.

இந்தோனேசியா நாட்டில் வெஸ்ட் ஏஸ் பகுதியில் கணவரு டன் வசித்து வருபவர் ஜமாலியா. இவர்களுக்கு ஜன்னா என்ற மகளும், ஆரிஃப் ப்ரதாமா ரங்குத்தி என்ற மகனும் உள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அந்நாட்டை சுனாமி தாக்கியது. அதில் அவரின் இரண்டு குழந்தைகளும் அடித்துச் செல்லப்பட்டனர். நீண்ட நாட்கள் தேடியும் அவர் கள் கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் சுனாமியில் இறந்திருக்க லாம் என்று அவர்கள‌து பெற்றோர் நினைத்துவிட்டனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஒரு கிராமத்தில் ஜன்னாவைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண்ணை ஜமாலி யாவின் சகோதரர் பார்த்திருக் கிறார். அதைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் விசாரித்தபோது காணாமல் போன தன்னுடைய மகள்தான் என்பதை ஜமாலியா உறுதி செய்தார்.

சுனாமியால் அடித்துச் செல்லப் பட்ட தான், வேறு ஒரு தீவில் மீனவர் ஒருவரால் கண்டெடுக் கப்பட்டேன் என்றும் அங்கே வேறு ஒரு பெண்மணி தன்னை வளர்த்து வந்தார் என்றும் ஜன்னா கூறினார். மேலும், தன்னுடைய தம்பியும் இதே தீவுக்குத்தான் சுனாமி அலையால் இழுத்து வரப்பட்டார் என்றும், எனினும் அவரின் இருப்பிடம் தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து ஜமாலியா கூறும்போது, “எங்களின் மகளை எங்களிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்த்ததற்கு கடவுளுக்கு நன்றி” என்றார்.

ஆசிரியர்