கறுப்புப் பணம் குறித்து 24,000 தகவல்களை இந்தியா பெற்றுள்ளதுகறுப்புப் பணம் குறித்து 24,000 தகவல்களை இந்தியா பெற்றுள்ளது

24 ஆயிரத்திற்கும்  அதிகமான ரகசிய தகவல்களை வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் குறித்து பல்வேறு நாடுகளிடமிருந்து இந்திய அரசு பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு  வைத்துள்ள இந்தியர்கள் கடந்த நிதியாண்டில் மேற்கொண்ட சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ரகசியத் தகவல்கள் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளன. அதிகபட்சமாக நியூசிலாந்திடம் இருந்து 10,372 தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக ஸ்பெயின்-4,169, பிரிட்டன் 3,164, ஸ்வீடன் 2,404, டென்மார்க் 2,145 பின்லாந்து 685, போர்ச்சுகல், 625, ஜப்பான் 440, ஸ்லோவீனியா 44 ஆகிய நாடுகள் தகவல்களை அளித்துள்ளன. இதுதவிர ஆஸ்திரேலியா, மெக்சிகோ, இத்தாலி,, டிரினிடாட் மற்றும் டுபாகோ ஆகிய நாடுகளும் சில தகவல் பரிமாற்ற விவரங்களை அளித்துள்ளன. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் சிலரின் முழுவிவரமும் இதில் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தகவல் அடிப்படையில் இந்திய வருமானவரித்துறையின் பல்வேறு, சிறப்பு பிரிவுகளும், கறுப்புப் பணம் மீட்டதற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்,பி.ஷா தலைமையிலான குழுவும் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்