கல்லூரி மாணவர்களின் ஆறு மாடி விடுதிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலத்த சேதம்கல்லூரி மாணவர்களின் ஆறு மாடி விடுதிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலத்த சேதம்

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் புறப் பகுதியில் கட்டப்பட்டு வந்த ஆறு மாடி கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம் ஒன்று திங்கட்கிழமை இடிந்து விழுந்ததில் மூவர் கொல்லப்பட்டனர்.

17 பேர் காயம் அடைந்தனர். விபத்து நிகழ்ந்தபோது சுமார் 30 பேர் அங்கு இருந்தனர். பலரும் மீட்கப்பட்டனர். இதர ஏழு பேரை மீட்க பணிகள் தொடர்ந்தன என்று தெரிவிக்கப்பட்டது. இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட ஒருவர், தன் கையை அசைத்து ஆட்டி நம்பிக்கையுடன் உதவி கேட்டார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. மீட்புப் பணியினர் அவரை உயிருடன் மீட்டுவிட்டனர்.

ஆசிரியர்