மகள் முன்னிலையில் மனைவியைக் கொன்ற கணவனுக்கு மரண தண்டனை மகள் முன்னிலையில் மனைவியைக் கொன்ற கணவனுக்கு மரண தண்டனை

மனைவியை தனது மகள் முன் கோடாரியால் வெட்டிக் கொன்றவரை, தலையைத் துண்டித்து மரண தண்டனை வழங்கியுள்ளது சவுதி அரசு.

நஜ்ரான் நகரைச் சேர்ந்த மஹ்தி அல் காபாரி தனது மனைவி ஷாக்ரா அல் பஹ்ரியை கோடாரியால் கழுத்தில் வெட்டிக் கொலை செய்தார். இக்கொலை அவரின் சிறுவயது மகள் முன் நடந்தது.

இது தொடர்பான வழக்கில், கொலை செய்த மஹ்ரி அல் காபாரிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரின் தலை வெட்டப்பட்டது. இதன் மூலம் நடப்பாண்டு நஜ்ரான் நகரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் 78 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆசிரியர்