ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய 10 நீதிபதிகளிடம் சீனா விசாரணைஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய 10 நீதிபதிகளிடம் சீனா விசாரணை

சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில், ஊழலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 10 நீதிபதிகளிடம் விசாரணை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில், அந்நாட்டில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நீதித்துறையும் ஊழல் விசாரணைகளுக்கு உட்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நீதிபதிகளிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது லஞ்சம் பெற்றதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்து, தவறான தீர்ப்பு வழங்கியாதகவும் புகார்கள் இருப்பதாக சீன அரசுக்குச் சொந்தமான சைனா டெய்லி இதழ் தெரிவித்துள்ளது.

இந்த 10 பேரில், 3 பேர் நீதி அமலாக்கத்துறை துணைத் தலைவர்கள், 5 பேர் தலைமை நீதிபதிகள், ஒருவர் துணைத் தலைமை நீதிபதி என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்