ஈரானிய பெண்ணொருவருக்கு முதற்தடவையாக கணித வியல் விருதுஈரானிய பெண்ணொருவருக்கு முதற்தடவையாக கணித வியல் விருது

அமெரிக்காவில் வேலை செய்யும் ஈரானிய கணிதவியல் நிபுணர் ஒருவர் உலகப் புகழ்பெற்ற பீல்ட்ஸ் மெடல் என்ற பதக்கத்தை வென்ற முதலாவது பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மிகவும் சிக்கலான கேத்திர கணித சிக்கல்களை தீர்ப்பதற்கு பேராசிரியை மரியம் மிர்சாகனி ஆற்றிய பணிகள் அவருக்கு விருதை பெற்றுக்கொடுத்துள்ளது. தென்கொரியாவில் நடைபெறும் வைபவமொன்றில் அவருக்கு விருதும் சன்மானமும் வழங்கப்பட்டது.

பீல்ட்ஸ் மெடல் என்பது பெருமளவில் கணிதத்திற்கு வழங்கப்படும் நொபெல் பரிசாக கருதப்படுகிறது. கனடாவை சேர்ந்த கணிதவியல் நிபுணர் ஜோன் பீல்ட்ஸ் என்பவர் இந்த விருதை உருவாக்கியிருந்தார். விருது பெறுபவருக்கு 15 ஆயிரம் கனேடியன் டொலர் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

ஆசிரியர்