உலகின் விலை உயர்ந்த வீடு சதுர அடி ரூ.13.8 லட்சம் உலகின் விலை உயர்ந்த வீடு சதுர அடி ரூ.13.8 லட்சம்

ஹாங்காங்கில்  ஒரு வீடு சதுர அடி 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தான்  உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த வீடாக கருதப்படுகிறது.

ஹாங்காங் தலைநகர் விக்டோரியா சிட்டிக்கு அருகில் வளர்ந்து வரும் பகுதியில் 12 தளங்களில் 12 ஆடம்பர சொகுசு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதன் விலை 640 கோடி ரூபாய்.

இதுகுறித்து இந்த கட்டடத்தை கட்டிய நிறுவனம் கூறியதாவது:

இங்குள்ள ஒவ்வொரு வீடும் சதுர அடி 14 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் இந்த வீடுகள் தான் உலகின் மிகவும் விலை உயர்ந்த வீடாக கருதப்படும்.

‘டுவெல்வ் பீக்ஸ்’ என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள 12 வீடுகளும் 4,661 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் நான்கு படுக்கையறைகள், தனி நீச்சல் குளம் இரண்டு கார்கள் நிறுத்துவதற்கு 900 சதுர அடி கார் பார்க்கிங், மொட்டை மாடி ஆகியவை உள்ளன. இதற்கு முன் 2011ல்,சதுர அடி 10 லட்சம் ரூபாய்க்கு விற்ற சாதனையை இந்த வீடுகள் முறியடித்துள்ளன. இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஆசிரியர்