இலங்கை நீதிமன்றம் பாகிஸ்தானியர்களை நாடு கடத்த தடை விதித்ததுஇலங்கை நீதிமன்றம் பாகிஸ்தானியர்களை நாடு கடத்த தடை விதித்தது

இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள அகமதியா, ஷியா, கிறிஸ்தவ சமூகத்தினரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ள நிலையில், அந்த முடிவுக்கு கொழும்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

இந்த இடைக்காலத் தடையானது இந்த மாதம் 29ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், அன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் நடைபெறும் வாதத்தில் அரசு கலந்துகொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

பாகிஸ்தானியர்களை இந்த மாதத் தொடக்கத்திலிருந்து இலங்கை அரசு நாடு கடத்தி வரும் நிலையில், இந்தத் தடையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஆசிரியர்