லண்டன் போலீசார் விக்கிலீக்ஸ் அசாஞ்ச்சை கைது செய்வதற்கு தயார் நிலையில் லண்டன் போலீசார் விக்கிலீக்ஸ் அசாஞ்ச்சை கைது செய்வதற்கு தயார் நிலையில்

விக்கிலீக்ஸ்’ இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், தற்போது அவர் தங்கியுள்ள ஈக்வடார்
தூதரகத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். இதையடுத்து, லண்டன் போலீசார், அவரை கைது செய்வதற்கு தயார் நிலையில் உள்ளனர்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர், ஜூலியன் அசாஞ்ச், 49. ‘விக்கிலீக்ஸ்’ என்ற
இணையதளத்தை நிறுவி, அதில், உலக நாடுகள் பலவற்றின் ஊழல்கள், முறைகேடுகள், அத்துமீறல் ஆகியவற்றை அம்பலப்படுத்தியவர். ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் நடந்த போரில், அமெரிக்க ராணுவத்தின் அத்துமீறல்களை, இணையதளத்தில் கசிய விட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர்.
அமெரிக்க ராணுவம் தொடர்பான பல முக்கிய ஆவணங்களையும், இணையதளத்தில் வெளியிட்டார். இதனால், பல நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளானார்.இதற்கிடையே, சுவீடனில், இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அந்நாட்டு போலீசார், அசாஞ்ச் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரை கைது செய்வதற்கு, சர்வதேச போலீஸ் படையான, ‘இன்டர்போல்’ உதவியையும், சுவீடன் அரசு நாடியது.இதற்கிடையே, லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டின் தூதரக அலுவலகலத்தில், 2012ல், அசாஞ்ச், தஞ்சம் புகுந்தார். அன்றிலிருந்து, அந்த அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாமல், அங்கேயே தங்கியுள்ளார். அங்கிருந்து வெளியேறினால், லண்டன் போலீசார், அவரை கைது செய்து, நாடு கடத்தக்கூடிய சூழ்நிலை உள்ளது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, நுரையீரல் மற்றும் இதய நோயால், அசாஞ்ச் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக அலுவலகத்தை விட்டு வெளியேறி, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அளவுக்கு, அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”என் உடல் நிலை, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது,” என்றார்.அப்போது, அவருடன் இருந்த, ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் ரிச்சர்ட் பாடின் கூறுகையில், ”இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அசாஞ்சுக்கு தஞ்சம் அளித்து, சட்ட ரீதியான பாதுகாப்பும் தந்தோம். இப்போது, அந்த சூழ்நிலை முடிவுக்கு வரவுள்ளது. அசாஞ்ச், தூதரகத்தை விட்டு வெளியேறினாலும், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம்,” என்றார்.இதற்கிடையே, அசாஞ்ச், ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறினால், அவரை கைது செய்து, சுவீடனுக்கு நாடு கடத்த, லண்டன் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

ஆசிரியர்