இலங்கை அரசு, ‘எபோலா’ வைரஸ் நோய் தாக்குதலுக்கு பயந்து, மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு, ‘விசா’ வழங்க தடை விதித்துள்ளது. கினியா, நைஜீரியா, லைபீரியா, சியாரா லியோன் போன்ற, மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், எபோலா வைரஸ் நோய் தாக்குதல் அதிகம் உள்ளது. மருந்து கண்டுபிடிக்கப்படாத அந்த நோய் தாக்கிய, 2,000 பேர் இறந்துள்ளதால், அந்நாடுகளில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால், பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில், இலங்கையும், மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு, இதுவரை வழங்கி வந்த, இலங்கைக்கு வந்ததும் விசா முறையை தடை செய்து, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
