March 24, 2023 3:15 pm

ஐஸ் பக்கெட் சவால்- ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு பெருமளவு நிதி ஐஸ் பக்கெட் சவால்- ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு பெருமளவு நிதி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஐஸ் பக்கெட் சவால் என்பது அமெரிக்காவை தவிர்த்து தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்த சவாலை பல பிரபலங்களும் ஏற்று கொண்டுள்ளனர். ஐஸ் பக்கெட் சவால் என்று குரல் எழுப்பிக் கொண்டு பிரபலங்கள் தங்களது தலை மேல் ஒரு பக்கெட் ஐஸ் நீரை ஊற்றிக் கொண்டு ஐஸ் பக்கெட் சவாலை பிரபலமாக்கி வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏன் அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்காக நிதி திரட்டவும் தான் பிரபலங்கள் ஒரு பக்கெட் ஐஸ் நீரை தங்கள் தலையில் ஊற்றிக் கொள்கிறார்கள். அமியோட்ராபிக் லேட்டரல் ஸ்க்லீரோசிஸ் என்று அழைக்கப்படும் இந்த நோய் நரம்புகளை பாதிக்கும். இந்த நோய் பாதித்தவர்களால் பேச, உணவை விழுங்க ஏன் மூச்சு விடக் கூட சிரமமாக இருக்கும். அவர்களின் கட்டுப்பாட்டில் எந்த செயல்களும் இருக்காது. ஏ.எல்.எஸ். நோய் ஏற்பட்டால் அதிகபட்சம் 39 மாதங்கள் தான் உயிருடன் இருக்க முடியும். இந்த வகை நோயாளிகளில் 4 சதவீதம் பேரே 10 ஆண்டுகளை தாண்டி வாழ்வார்கள். உலக மக்கள் தொகையில் லட்சத்தில் இருவருக்கு ஏ.எல்.எஸ். நோய் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.

பிரபல எழுத்தாளரான இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் ஏ.எல்.எஸ். நோயால் பாதிக்கப்பட்டபோதிலும் 50 ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப்பிடித்துள்ளார். இது மிகவும் அரிது என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். இந்த ஏ.எல்.எஸ். நோய் குறித்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிகிச்சைக்கு நிதி திரட்டவும் தான் இந்த ஐஸ் பக்கெட் சவால் விடுக்கப்படுகிறது. இந்த சவால் தற்போது மகிவும் பிரபலமாகி வருவதுடன் நிதியும் குவிகிறது. ஐஸ் பக்கெட் சவாலை எதிர்கொள்பவர்கள் தங்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றிக் கொண்ட பிறகு 3 பேருக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுக்க வேண்டும். அவர்கள் சவாலை ஏற்காவிட்டால் 100 அமெரிக்க டாலரை ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும்.

அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்பால் வீரரும், ஏ.எல்.எஸ். நோயாளியுமான பீட் ஃபிராட்ஸ் ஐஸ் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அவருக்கு இந்த ஐடியாவை அவரது நண்பர் ஒருவர் கொடுத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐஸ் பக்கெட் சவாலை அடுத்து ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு இதுவரை சுமார் இந்திய ரூ. 139 கோடி நிதி கிடைத்துள்ளது. இணையதளத்தில் தற்போது இந்த ஐஸ் பக்கெட் சவால் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. பலரும் இந்த சவாலை ஏற்று வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்