April 1, 2023 6:14 pm

உலகிலேயே மிக அதிவேகமாக பாய்ந்து செல்லும் புல்லட் ரயில்உலகிலேயே மிக அதிவேகமாக பாய்ந்து செல்லும் புல்லட் ரயில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சீனா அனைத்து துறைகளிலும் அதிவேகமாக முன்னேறி வருகிறது. உலகிலேயே மிக அதிவேகமாக பாய்ந்து செல்லும் புல்லட் ரயில்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. விண்வெளி துறையில் ஆய்வு மேற்கொண்டு முன்னேறி வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஒலியை விட மிக அதிவேகமாக பயணம் செய்ய கூடிய சூப்பர் சோனிக் நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கிறது. இந்த கப்பலை சீனாவின் ஹார்பின் இண்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் நிபுணர்கள் வடிவமைத்து தயாரிக்கின்றனர். இதில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நீர் மூழ்கி கப்பல் சீனாவில் ஷாங்காய் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவுக்கு 2 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும். சான்பிரான்சிஸ்கோ அமெரிக்காவின் மேற்கு பகுதியிலும், ஷாங்காய் சீனாவின் கிழக்கு பகுதியிலும் உள்ளது.

அவற்றின் இடையேயான தூரம் 9,873 கி.மீ சீனாவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே பகைமை நிலையுடன் கூடிய பனிப்போர் இருந்தது. அப்போது சோவியத் ரஷ்யா சூப்பர் கேவியசன் என்ற அதிநவீன நீர்மூழ்கி கப்பலை தயாரித்தது. அதுவே தங்களுக்கு தூண்டுதலாக இருந்தது என்று விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்