முன்னாள் ராணுவ வீரர் பலி | சிறுமிக்கு பயிற்சி அளித்த போது நடந்த விபரீதம்முன்னாள் ராணுவ வீரர் பலி | சிறுமிக்கு பயிற்சி அளித்த போது நடந்த விபரீதம்

அமெரிக்காவில் 9 வயது சிறுமி ஒருவருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்த போது தவறுதலாக குண்டு பாய்ந்ததில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சார்லஸ் வாகா (39). லேக்கவுசு நகரை சேர்ந்த இவர் அரிசோனாவில் உள்ள ஒயிட் கில்ஸ் பகுதியில் உள்ள திறந்த வெளி துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் பயிற்சியாளராக பணி புரிந்து வந்தார்.

சமீபத்தில் அங்கு நியூ ஜெர்சியை சேர்ந்த தம்பதி ஒன்று தங்களின் 9 வயது மகள் ஒருவரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுவதற்காக சேர்த்தனர். அச்சிறுமிக்கு சார்லஸ் தான் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இயந்திரத் துப்பாக்கி ஒன்றின் மூலம் சார்லஸ் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக துப்பாக்கிக் குண்டு சார்லஸ் மீது பாய்ந்தது.

மற்ற பயிற்சியாளர்கள் உடனடியாக சார்லசை லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சார்லஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றை தற்போது அமெரிக்க போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ஆசிரியர்