இஸ்ரேல் காஸாவை மீண்டும் கைப்பற்ற பரிசீலித்தது இஸ்ரேல் காஸாவை மீண்டும் கைப்பற்ற பரிசீலித்தது

காஸா பகுதியை மீண்டும் ராணுவத்தை அனுப்பிக் கைப்பற்றுவது குறித்து இஸ்ரேல் அரசு தீவிரமாக பரிசீலித்ததாக இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் உளவுத் துறை அமைச்சர் யுவல் ஸ்டீனிட்ஸ் வியாழக்கிழமை கூறியதாவது:

காலவரையற்ற போர் நிறுத்தம் அறிவிப்பதற்கு முன்பாக இஸ்ரேல் ராணுவ தளபதிகள் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரவையிடம் போர் நிலவரம் குறித்து விளக்கமளித்தனர்.

அப்போது, ராணுவத்தை அனுப்பி காஸா பகுதி முழுவதையும் கைப்பற்றும் திட்டம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

ஒருவேளை ஹமாஸ் இயக்கம் ஏவுகணைத் தாக்குதலை இன்னும் சில வாரங்களுக்கோ, சில மாதங்களுக்கோ தொடர்ந்திருந்தால், அந்த நிலையைச் சமாளிக்க ராணுவ ஆக்கிரமிப்புதான் ஒரே தீர்வாக இருந்திருக்கும்” என்று கூறினார்.

ஆசிரியர்