மேனகா | சர்வதேச காற்பந்து பயிற்சிக்கு தெரிவானார் மேனகா | சர்வதேச காற்பந்து பயிற்சிக்கு தெரிவானார்

சர்வதேச காற்பந்து பயிற்றுவிப்பாளர் அனுமதி பத்திர பயிற்சி நெறிக்காக முதற்தடவையாக இலங்கை பெண் தெரிவாகியுள்ளார்.   ஊவா மாகாணம்- பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த டி.எஸ். மேனகா பிரிட்டன் காற்பந்து சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பயிற்சி நெறியில் கலந்து கொள்ளவுள்ளார்.

இவருக்கான அனைத்து செலவையும் பிரிட்டன் புனித ஜோர்ஜ் பார்க்- ஸ்டெபொர்ஷிர் என்ற முகவரியில் அமைந்துள்ள காற்பந்து சம்மேளனம் ஏற்றுக்கொண்டுள்ளது.   ஆசிய காற்பந்து சம்மேளனம்  முன்மொழிந்த பெண் பயிற்றுவிப்பாளர்களில் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ள டி.எஸ். மேனகா 16 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் அணிக்கு பயிற்றுவிப்பாளராக பணியாற்றியவர்.

தற்போது  பெண்களுக்கான தேசிய காற்பந்து அணிக்கு உதவி பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார்.ஏற்கனவே ஆசிய காற்பந்து சம்மேளனத்தின் சி பயிற்றுவிப்பாளர் அனுமதிப் பத்திரம் மற்றும் FIFA கோல் தடுப்பாளருக்கான அனுமதிபத்திரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்