சிங்கப்பூரில் காற்றாடி திருவிழா- 400 மணி நேரத்தில் ஒரு காற்றாடி சிங்கப்பூரில் காற்றாடி திருவிழா- 400 மணி நேரத்தில் ஒரு காற்றாடி

சிங்கப்பூரில், கடந்த வாரம் நடந்த, காற்றாடி திருவிழாவில் இடம் பெற்ற மிகப் பெரிய காற்றாடியை தயாரிக்க, 400 மணி நேரம் ஆனதாக, அதை உருவாக்கியவர் கூறினார். சிங்கப்பூரில் உள்ள மெரினா பே கடற்கரையில், தொழில் முறை காற்றாடி தயாரிப்பாளர்கள்,

தாங்கள் தயாரித்த பலவித காற்றாடிகளை பறக்கவிட்டனர். அதில், மிகப் பெரிய, ‘துரியன்’ பழம் உள்ளிட்ட பல வடிவங்களில் தயாரிக்கப்பட்ட, பத்து, ‘மெகா சைஸ்’ காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன. இவற்றை தயாரித்த, வடக்கு இத்தாலியை சேர்ந்த, அர்னால்டோ மெஜெட்டோ, 61, ஒவ்வொன்றையும் தயாரிக்க, 400 மணி நேரமானது என்று கூறியுள்ளார். இதுவரை, 300க்கும் மேற்பட்ட காற்றாடிகளை, தன் மகளுடன் இணைந்து, அர்னால்டோ தயாரித்துள்ளார்.

ஆசிரியர்