பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் 4 மாடி கட்டிடம் நொறுங்கி விழுந்ததுபிரெஞ்சு தலைநகர் பாரிஸில் 4 மாடி கட்டிடம் நொறுங்கி விழுந்தது

பிரெஞ்சு தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியில் நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென்று வெடிந்து, நொறுங்கி விழுந்தது.

உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பிரெஞ்சு உள்துறை மந்திரி பெர்னார்ட் கேஸெநியுவே ‘திடீரென்று ஏற்பட்ட வாயுக்கசிவினால் அந்த கட்டிடத்தில் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம்’ என்று நிருபர்களிடம் கூறினார்.

அது என்ன வகையான வாயுக்கசிவு? என்ற கேள்விக்கு விடையளிக்க மறுத்துவிட்ட அவர், தற்போதுதான் விசாரணை தொடங்கியுள்ள நிலையில் இதுபற்றி உறுதியாக ஏதும் கூறுவதற்கில்லை என்று தெரிவித்தார்.

இடிபாடுகளில் சிக்கிய ஒரு சிறுவன் உயிரிழந்ததாக நேற்று காலை அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று மாலை நிலவரப்படி 2 சிறுவர்கள், 2 பெண்கள் உள்பட இதுவரை 6 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 11 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசிரியர்