“லிபியாவின் விடியல்’ அமெரிக்கத் தூதரகத்தை கைப்பற்றியது“லிபியாவின் விடியல்’ அமெரிக்கத் தூதரகத்தை கைப்பற்றியது

லிபியத் தலைநகர் திரிபோலியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை “லிபியாவின் விடியல்’ என்ற கிளர்ச்சி அமைப்பு கைப்பற்றியுள்ளது.

அது தொடர்பான விடியோவையும் வலைதளத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “”திரிபோலி தூதரகம் கைப்பற்றப்பட்டது தொடர்பான விடியோ காட்சிகளைப் பார்த்தோம்.

எனினும் அங்குள்ள உண்மையான நிலவரம் குறித்து உறுதியாகத் தெரியவில்லை.

திரிபோலியில் ஆயுதக் குழுக்களிடையே சண்டை நடைபெற்று வருவதால் அங்கிருந்த தூதரக அதிகாரிகளை வல்லெத்தா, மால்டா ஆகிய நகரங்களுக்கு ஏற்கெனவே அனுப்பிவிட்டோம்.

அங்கு அவர்கள் பத்திரமாக உள்ளனர். அங்கிருந்து அவர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

ஆசிரியர்