நியூயார்க் நகரத்தில் புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டன் மைதானத்தில் பிரதமர் நரேந்திரமோடி- அதிர்ஷ்ட குலுக்கல் முறை மூலம் பார்வையாளர்கள் தேர்வு நியூயார்க் நகரத்தில் புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டன் மைதானத்தில் பிரதமர் நரேந்திரமோடி- அதிர்ஷ்ட குலுக்கல் முறை மூலம் பார்வையாளர்கள் தேர்வு

பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்காவில் பேச உள்ள கூட்டத்தில் பங்கேற்க அதிகமானோர் ஆன்லைன்மூலம் விண்ணப்பித்துள்ளதால், அதிர்ஷ்ட குலுக்கல் முறை மூலம் பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பும் பிரதமர் நரேந்திரமோடி, இம்மாத இறுதியில் அமெரிக்க பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது, வரும் 28ம் தேதி, நியூயார்க் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற பிரம்மாண்டமான மேடிசன் ஸ்கொயர் கார்டன் மைதானத்தில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை, 700க்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து செய்து வருகின்றன.

ஆசிரியர்