பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம்- இம்ரான் கான் ஏற்றுக்கொண்டார்பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம்- இம்ரான் கான் ஏற்றுக்கொண்டார்

தூதுக்குழுவின் வேண்டுகோளை ஏற்று, பாகிஸ்தான் அரசுடன் பேச்சு நடத்த இம்ரான் கானும், காதிரியும் நேற்று முடிவு செய்துள்ளனர்.அரசியல் நெருக்கடி: பாகிஸ்தானில், பொதுத் தேர்தலில் முறைகேடு செய்து ஆட்சியை நவாஸ் ஷெரீப் கைப்பற்றியதாக எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கானும், நவாஸின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது என மத குரு காதிரியும் குற்றம் சாட்டி வருகின்றனர். பிரதமர் பதவியை நவாஸ் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அவர்களின் தலைமையில் தொடர் போராட்டம் நடந்து வருகின்றனர்.நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், நவாஸின் பிரதமர் இல்லம் உள்ளிட்டவை முற்றுகை இடப்பட்டன. போராட்டத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்துமாறு, இம்ரான் கானும், காதிரியும் தங்களது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.தூதுக்குழு: இம்ரான் கான், காதிரியின் போராட்டங்களால் பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவி வந்தது. இதனை தீர்ப்பதற்காக, ராணுவம் களத்தில் இறங்கியது. இதனால், ஆட்சியை ராணுவம் கைப்பற்றக்கூடும் என்ற அச்சத்தில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் சிராஜுல் ஹக் தலைமையில், எம்பிக்கள் அடங்கிய தூதுக்குழு அமைக்கப்பட்டது.
தூதுக் குழுவினர், இம்ரான் கான் மற்றும் காதிரியிடம் பேச்சு நடத்தினர். இதன் பின்னர், சிராஜுல் ஹக் கூறுகையில், “பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என நாங்கள் வைத்த கோரிக்கையை இம்ரான் கான் ஏற்றுக்கொண்டார். அவருக்கும், காதிரிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நல்ல தீர்வு ஏற்படும்வரை பேச்சு தொடர்ந்து நடக்கும்Ó என்றார்.தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ரெஹ்மான் மாலிக் கூறுகையில், “பேச்சுவார்த்தைக்கு எதிர்த்தரப்பினர் ஒப்புக் கொண்டிருப்பதை, அவர்களின் பலவீனமாக அரசு பார்க்கக் கூடாது. போராட்டக்காரர்களை கைது செய்வதை, அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.Ó என்றார்.அரசியல் நெருக்கடி குறித்து, நேற்று முன்தினம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவாக தீர்மானம் இயற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்