மொபைல் போன் எண்ணிக்கை உலக மக்கள் தொகையை விட அதிகரித்து விடும்-‘சிலிக்கான் இந்தியா’மொபைல் போன் எண்ணிக்கை உலக மக்கள் தொகையை விட அதிகரித்து விடும்-‘சிலிக்கான் இந்தியா’

இந்த ஆண்டின் இறுதிக்குள், உலக மக்கள் தொகையை விட, மொபைல் போன்கள் எண்ணிக்கை அதிகரித்து விடும் என, ‘சிலிக்கான் இந்தியா’ என்ற, தொலைத் தொடர்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உலக மக்கள்தொகை, 700 கோடியாக உள்ளது. மொபைல் போன் எண்ணிக்கை, இப்போது, 600 கோடியாக உள்ளது. இது, இந்த ஆண்டின் இறுதியில், 740 கோடியாக உயரும்’ என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே, ரஷ்யா, பிரேசில் போன்ற பல நாடுகளில், அந்நாட்டின் மக்கள்தொகையை விட, மொபைல் போன்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்ற தகவலையும், அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்