யோகாவில் அசத்தும் 96 வயது பாட்டியோகாவில் அசத்தும் 96 வயது பாட்டி

90 வயதை தாண்டியவர்கள் நடப்பதற்கே சிரமப்படும் நிலையில், பிரிட்டனில் வசிக்கும், 96 வயது மூதாட்டி, தான் கற்ற யோகா உடற்பயிற்சிக் கலையால், இன்றும் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

லண்டனில் வசிப்பவர், தாவோ போர்சன், 96. யோகாசன கலையில் சிறந்து விளங்கும் இவர், உலகின் மிகவும் வயதான யோகா ஆசிரியராக, ‘கின்னஸ்’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்தியாவில் பிறந்த இவர், பின்னாளில், பிரிட்டனில் குடியேறினார்.

மெலிந்த உடல், அழகு முகம், உடற்பயிற்சி செய்யும்போது, அவருடைய முகத்தில் தோன்றும் புன்னகை என, அவரது தோற்றத்தில் இருந்து, அவர் வயதை கணக்கிட முடியாது. தற்போதைய இளம் தலைமுறையினருக்கு, ‘ரோல் மாடலாக’ விளங்கும் இவர், உடற்பயிற்சி மட்டுமல்லாமல், நன்றாக நடனமும் ஆடக்கூடியவர்.

மற்றவர்களுக்கு யோகா உடற்பயிற்சியை கற்றுத் தருவதில், முன்னணியில் உள்ள இவர், அனைத்து வேலைகளையும் தானே செய்வதுடன், தன் காரையும் ஓட்டிச் செல்கிறார்.

தினமும் உடற்பயிற்சி செய்தால் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் என்பதற்கு, தாவோ பார்சோன் மிகப் பெரிய எடுத்துக்காட்டு.

ஆசிரியர்