பிரிட்டிஷ் அரசியின் ஹெலிகாப்டரை இயக்க பைலட் தேவை | விளம்பரம்பிரிட்டிஷ் அரசியின் ஹெலிகாப்டரை இயக்க பைலட் தேவை | விளம்பரம்

பிரிட்டிஷ் அரசி எலிஸபெத்தின் ஹெலிகாப்டரை செலுத்த பைலட் உடனடியாகத் தேவை என்ற விளம்பரம் பிரிட்டிஷ் அரச குடும்பத்து வலைதளத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த வேலைக்கான முக்கிய தகுதிகளில் ஒன்று, விவிஐபி எனும் மிக மிக முக்கிய நபர்களுக்கு பைலட்டாக இருந்த முன் அனுபவம் இருக்க வேண்டும். மாத சம்பளம் சுமார் ரூ. 6.5 லட்சம் தரப்படும்.

இரண்டு ஹெலிகாப்டர்கள் அரசியின் பயன்பாட்டில் உள்ளன. இவற்றைச் செலுத்தும் தலைமை பைலட் தேவை என விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

பைலட் உரிமத்துடன், முன்யோசனை, உடனடி முடிவெடுக்கும் அறிவுத் திறன், அவசர நிலைகளை எதிர்கொண்டு பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் இருந்தால் இம்மாதம் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இளவரசர் சார்லஸ், அவரது மகன்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் முறையாக விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. சார்லஸ் பிரிட்டிஷ் விமானப் படையில் பணியாற்றியுள்ளார்.

இளவரசர் வில்லியம் மருத்துவ விமான பைலட்டாக இந்த மாதம் முதல் பணியாற்றவுள்ளார்.

அதற்கான மாத ஊதியம் சுமார் ரூ. 3 லட்சமாகும். இதனை ஒரு தொண்டு நிறுவனத்துக்கு அளிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

ஆசிரியர்