ஐ.எஸ்.-க்கு எதிராக அமெரிக்காவுடன் ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டோம்-ஈரான்ஐ.எஸ்.-க்கு எதிராக அமெரிக்காவுடன் ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டோம்-ஈரான்

 

ஜிஹாதி இஸ்லாமிய அமைப்பான ஐ.எஸ்.-க்கு எதிராக அமெரிக்காவுடன் ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டோம் என்று ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டமாக இன்று தெரிவித்தார்.

“தொடக்கம் முதலே இராக்கில் உள்ள தூதர் மூலம் ஐ.எஸ். -க்கு எதிராக ஒத்துழைப்பு வழங்க முடியுமா என்று ஈரானைக் கேட்டு வருகிறது அமெரிக்கா. நான் ‘ஒரு போதும் இல்லை’ என்றேன்… காரணம் அவர்கள் கைகள் கறை படிந்த கைகள்.

அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி ஈரானின் ஜவாத் ஜரீஃபிடம் இது பற்றி தனிப்பட்ட முறையில் கேட்டுள்ளார். ஆனால் அவர் நேரடியாக நிராகரித்து விட்டார்.

பாகிஸ்தானில் தங்கள் இஷ்டப்படி குண்டுகளை வீச எப்படி சுய அதிகாரத்தை அமெரிக்கா வழங்கிக் கொண்டதோ அதே போல் இராக், சிரியாவிலும் செய்ய நினைக்கின்றனர்” என்று அவரது அதிகாரபூர்வ இணையதளத்தில் கூறியுள்ளார்.

ஆசிரியர்