24 வயது மாடல் அழகி | 81 வயது கோடீஸ்வரரை மணந்தார்24 வயது மாடல் அழகி | 81 வயது கோடீஸ்வரரை மணந்தார்

ஆஸ்திரியாவை சேர்ந்தவர் ரிச்சர்ட் லூங்கர்(81). பிரபல தொழிலதிபர் ஆவார். இவர் கேத்தி என்ற 24 வயது மாடல் அழகியை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், அதன் பின்னர் இப்போது திருமணம் செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர். ரிச்சர்ட் லூங்கர் ஏற்கனவே 5 திருமணம் செய்துள்ளார்.

இது அவரது  6வது திருமணம் ஆகும். இவ்வளவு வயதானவரை திருமணம் செய்திருக்கிறீர்களே என்று கேத்தியிடம் கேட்ட போது, வயதானவராக இருந்தாலும் அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனவே நான் திருமணம் செய்து கொண்டேன். நான் அவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்துவேன் என்று கூறினார். திருமணம் முடிந்ததும் ரிச்சர்ட் லூங்கர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஏராளமான பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்