தமிழ் பெண்மணி இந்திரா நூயி தொழில் துறையில் சக்திவாய்ந்த பெண்கள்பட்டியலில் 3-வது இடத்தில் தமிழ் பெண்மணி இந்திரா நூயி தொழில் துறையில் சக்திவாய்ந்த பெண்கள்பட்டியலில் 3-வது இடத்தில்

பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி (58), தொழில்துறையில் சக்தி வாய்ந்த பெண்களுக்கான “ஃபார்ச்சூன்’ இதழின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

சென்னையில் பிறந்த தமிழரான இவர், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.

கடின உழைப்பின் மூலம், நிறுவனத்துக்கு முன்னேற்றம் கொண்டு வரும் பெண்களைத் தேர்ந்தெடுத்து, ஃபார்ச்சூன் இதழ் ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது.

இதில், 2014-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்திரா நூயி மூன்றாவதாக இடம் பெற்றுள்ளார்.

ஐ.பி.எம் நிறுவனத் தலைவர் மற்றும் தலைமைச் செயலதிகாரி ஜின்னி ரோமெட்டி முதலிடத்திலும், ஜெனரல் மோட்டார்ஸ் தலைமைச் செயலதிகாரி மேரி பாரா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆசிரியர்