ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் பதவியிலிருந்தும் அலெக்ஸ் ஸால்மண்ட் ராஜிநாமா ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் பதவியிலிருந்தும் அலெக்ஸ் ஸால்மண்ட் ராஜிநாமா

பிரிட்டனுடன் தொடர்ந்து நீடிக்க ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்தளித்துள்ள நிலையில், ஸ்காட்லாந்து தேசிய கட்சியிலிருந்தும், முதல் அமைச்சர் பதவியிலிருந்தும் அலெக்ஸ் ஸால்மண்ட் சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதவாது:

இந்த வாக்கெடுப்புடன் ஸ்காட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கான பிரசாரம் முடிவடைந்து விடவில்லை. அந்தக் கனவு எப்போதும் அழிவதில்லை.

ஸ்காட்லாந்துக்கான அதிகாரத்தைப பகிர்ந்தளிக்கும் நிர்பந்தத்தில் பிரிட்டன் உள்ளது. ஸ்காட்லாந்துக்கான அடுத்த முதல் அமைச்சர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவியில் நீடிப்பேன். அதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட உள்ளேன். முதல் அமைச்சராகப் பதவி வகித்தது என் வாழ்வில் சிறப்பான தருணங்கள் ஆகும்.

வாக்கெடுப்பில் நாங்கள் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் எங்கள் அரசியல் நோக்கங்களை அடையும் முயற்சிகளைக் கைவிடவில்லை. ஸ்காட்லாந்து தனி நாடாக உருவாகுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் உள்ளன என்று அலெக்ஸ் ஸால்மண்ட் தெரிவித்தார்.

ஆசிரியர்