பிரான்ஸ் ஈராக்கில் ஐஎஸ் மீது தாக்குதலைத் தொடங்கியது பிரான்ஸ் ஈராக்கில் ஐஎஸ் மீது தாக்குதலைத் தொடங்கியது

ஈராக்கிலுள்ள இஸ்லாமிய தேச இலக்குகள் மீது பிரான்ஸ் முதல்முறையாக தாக்குதல் நிகழ்த்தியது.

பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடு பிரான்ஸ். எனினும், தற்போது ஈராக்கில் ஐஎஸ்சுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் தொடுக்கும் முதல் நாடாக பிரான்ஸ் ஆகியுள்ளது. இதுகுறித்து அநாநாட்டு அதிப்ர ஃபிரான்சுவா ஹொலாந்த் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐஎஸ் பயங்கரவாதிகளின் கிடங்கு ஒன்றின் மீது, எங்களது ரஃபேல் ரக போர் விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தின. இத்தாக்குதலில் அந்தக் கிடங்கு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இது போன்ற தாக்குதல்கள் இனி வரும் நாள்களில் தொடர்ந்து நிகழ்த்தப்படும். ஈராக்கின் இறையாண்மையைக் காக்கும் பொருட்டு, அந்நாட்டு ராணுவம் மற்றும் குர்து படைகளுக்கு பிரான்ஸ் அளித்து வரும் உதவிகள் குறித்து பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் பிரதமர் விளக்கமளிப்பார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்