ராஜபக்ஷேவிடம் பாஜ வலியுறுத்தல் | இலங்கை தமிழர், தமிழக மீனவர் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வுராஜபக்ஷேவிடம் பாஜ வலியுறுத்தல் | இலங்கை தமிழர், தமிழக மீனவர் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு

இலங்கை தமிழர் பிரச்னைக்கும், தமிழக மீனவர் பிரச்னைக்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம், பாஜ தலைவர்கள் வலியுறுத்தினர். ஆசியாவில் உள்ள 41 நாடுகளைச் சேர்ந்த 360 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாடு கொழும்புவில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க சென்ற பாஜவின் தேசிய பொதுச் செயலரும் கட்சியின் தமிழகப் பொறுப்பாளருமான முரளிதர ராவ், பாஜவின் வெளி நாட்டு விவகாரங்களின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளர் விஜய் ஜாலி ஆகியோர் ராஜபக்ஷேவை நேற்று சந்தித்து பேசினர். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். குறிப்பாக இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆசிரியர்