வீட்டில் உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பல்: ரூ. 59 லட்சத்துக்கு விற்பனைவீட்டில் உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பல்: ரூ. 59 லட்சத்துக்கு விற்பனை

ஸ்வீடனில் இளைஞர் ஒருவர் தன் வீட்டில் உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பல் இணையதளம் மூலம் 98,500 டாலருக்கு (சுமார் ரூ. 59 லட்சம்) ஏலம் முறையில் விற்பனையானது.

ஸ்வீடனைச் சேர்ந்த எரிக் வெஸ்டர்பர்க் என்பவர், இரண்டு ஆண்டு காலமாக சிறிது, சிறிதாக பொருள்களைச் சேர்த்து இதனை உருவாக்கினார்.

ஆறு மீட்டர் நீளம், 8,500 கிலோ எடை கொண்ட இந்த நீர்மூழ்கியை 2007-ஆம் ஆண்டே இவர் உருவாக்கிவிட்டார். “இஸபெல்’ எனப் பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், ஸ்வீடனின் பல பகுதிகளில் காட்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதனை விற்பனை செய்வது எனத் தீர்மானித்து இணையதளத்தில் விளம்பரம் செய்தார். உலகின் பல பகுதிகளிலிருந்தும் இதனை வாங்க ஆர்வம் எழுந்ததைத் தொடர்ந்து, ஏலம் முறையில் இது விற்பனை செய்யப்பட்டது.

“”சொந்தமாக ஒரு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க நினைத்து அதற்கான தொழில்நுட்ப வரைபடங்களை இணையதளத்தில் தேடினேன். அது கிடைக்காததால், நானே பொது அறிவைக் கொண்டு இதனை உருவாக்கினேன். 3,500 மணி நேர உழைப்பு இதன் பின்னுள்ளது” என்று எரிக் வெஸ்டர்பர்க் குறிப்பிட்டார்.

ஆசிரியர்