March 27, 2023 4:35 am

45 கோடி ரூபாய் பரிசு லாட்டரியில் வடக்கு லண்டனில் தெரு பெருக்கும் ஜோசப்புக்கு 45 கோடி ரூபாய் பரிசு லாட்டரியில் வடக்கு லண்டனில் தெரு பெருக்கும் ஜோசப்புக்கு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வடக்கு லண்டனில் வசிக்கும் ஜோசப் வைட்டிங்(42) வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு தெரு பெருக்கும் வேலைக்கு புறப்பட்ட ஜோசப், அந்த லாட்டரி கடை வாசலுக்கு வந்தபோது, அவர் வாங்கிய சீட்டுக்குதான் பரிசு விழுந்துள்ளது என்பதை உறுதி செய்துக் கொண்டார்.


எனினும், கோடீஸ்வரனாகி விட்டோமே என்ற ஆணவம் கொஞ்சமும் இன்றி, வழக்கம் போல் துடைப்படத்தை பிடித்து, தனக்கு ஒதுக்கப்பட்ட தெருவை பெருக்கத் தொடங்கினார்.

3 பிள்ளைகளுக்கு தந்தையான ஜோசப் வைட்டிங், கடந்த 14 ஆண்டுகளாக வடக்கு லண்டன் பகுதியில் தெருக்களை கூட்டிப் பெருக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தனது உறவினர் ஒருவருக்காக ரொட்டி வாங்க கடைக்கு சென்றபோது, குலுக்கலுக்கு சுமார் 15 நிமிடம் முன்னதாக அந்த அதிர்ஷ்ட சீட்டை ஜோசப் வாங்கியுள்ளார்.

அவர் மட்டும் ரொட்டி வாங்க என்னை கடைக்கு அனுப்பாமல் இருந்திருந்தால், அந்தப் பரிசுச் சீட்டை வாங்கும் வாய்ப்போ, இவ்வளவு பெரிய அதிர்ஷ்ட்டத்தை அடையும் சந்தர்ப்பமோ எனக்கு கிடைத்திருக்காது என்று குறிப்பிடும் இவர், விரைவில் வேலையை ராஜினாமா செய்து விட்டு, டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு தனது பிள்ளைகளுடன் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார்.

இதுநாள் வரை நான் பார்த்துவந்த தொழில் ஒன்றும் அவ்வளவு கேவலமான தொழில் அல்ல என்று கூறும் ஜோசப் வைட்டிங், வேலையை விட்டு நின்று விட்டாலும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்திருக்கும் பழக்கத்தை விட்டுவிட மாட்டேன் என்று உறுதிபட கூறுகிறார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்