இரட்டை கோபுர தகர்ப்பு வழக்கில் பின் லேடன் மருமகன் சுலைமான் அபு காய்த்துக்கு ஆயுள் தண்டனைஇரட்டை கோபுர தகர்ப்பு வழக்கில் பின் லேடன் மருமகன் சுலைமான் அபு காய்த்துக்கு ஆயுள் தண்டனை

உலகையே அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாதிகள் 11-9-2001 அன்று அமெரிக்காவை பழிவாங்க 4 விமானங்களை கடத்தினர். அதில் 2 விமானங்கள் 100 மாடிகள் கொண்டநியூயார்க்கின் இரட்டை கோபுர கட்டிடத்தை மோதி தகர்த்தன. ஒரு விமானம் பென்டகன் மீதும் மற்றொரு விமானம் தரையிலும் விழுந்து நொறுங்கியது.

4 விமானங்களில் இருந்த அனைவரும் பலியானார்கள். இந்த தாக்குதலில் உலக வர்த்தக மையமான இரட்டை கோபுர கட்டிடங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்தது.

இரட்டை கோபுர தகர்ப்பு வழக்கில் சுலைமான் அபு காய்த்துக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி லெவிஸ் கப்லான் உத்தரவிட்டார். அமெரிக்கர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்காகவும், தீவிரவாதிகளுக்கு தேவையானவற்றை வழங்கியதற்காகவும் அவனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தண்டனையை தவிர, தற்போது 48 வயதாகும் அபு காய்த்துக்கு அமெரிக்காவிலும், உலகின் இதர பகுதிகளிலும் உள்ள சொத்துகளை சொந்தம் கொண்டாடும் உரிமையும் பறிக்கப்படுவதாக மண்ஹாட்டன் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

’இந்த தண்டனையின் மூலம் இனி உயிர் உள்ளவரை சுலைமான் அபு காய்த் சிறையை விட்டு வெளியே வர முடியாது’ என்று இவ்வழக்கை நடத்தி வந்த அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்