உலக சாதனை ஒரே நாளில் 19 நாடுகள் பயணித்த நார்வே குழுஉலக சாதனை ஒரே நாளில் 19 நாடுகள் பயணித்த நார்வே குழு

ஸ்காண்டினேவிய நாடுகளில் ஒன்றான நார்வேயைச் சேர்ந்த குன்னார் கர்போர்ஸ்(39), டே யங் பக்(42) மற்றும் ஒய்வின்ட் ஜுப்விக்(38) ஆகிய மூவரும் இணைந்து கடந்த சனிக்கிழமை அன்று இரவு ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்த புறப்பட்டனர்.

24 மணி நேரத்தில் 17 நாடுகளைக் கடந்த முந்தைய சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் கிரீஸ் மற்றும் பல்கேரியாவைப் பிரிக்கும் எல்லைப்பகுதியிலிருந்து சனிக்கிழமை அன்று இரவு புறப்பட்டனர். அங்கிருந்து மாசெடோனியா, கொசாவோ, செர்பியா, குரேஷியா, போஸ்னியா, ஸ்லோவேனியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், பிரான்ஸ், சுவிட்சர்லாந்தைக் கடந்து லீச்டென்ஸ்டைனில் ஞாயிறன்று இரவு தங்களின் பயணத்தை முடித்தனர்.

கிரீசில் வாடகைக் காரில் ஏற்பட்ட பிரச்சினையுடன் சுவிட்சர்லாந்தில் பயங்கரமான புயல்மழையில் மாட்டிக்கொண்டதைத் தவிர இது ஒரு அற்புதமான பயணமாக முடிந்தது என்று கர்போர்ஸ் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். இரண்டு நாடுகளை அதிகமாகக் கடந்ததன் மூலம் இந்த மூவர் குழு புதிய உலக சாதனையை நடத்தியுள்ளது. ஒய்வின்ட் டிரைவராகத் தன் பங்கை சிறப்பாகச் செய்ய டே பயணத்தின்போது பங்கீட்டுப் பொறுப்புகளை மேற்கொண்டார். உணவிற்காக நேரம் ஒதுக்க முடியாத நிலையில் இவர்கள் இனிப்புகள், சாண்ட்விச்சுகள், உப்பு, சக்தி பானங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆசிரியர்