எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்க கியூபா மருத்துவ குழுஎபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்க கியூபா மருத்துவ குழு

மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கியூபாவிலிருந்து 450-க்கும் அதிகமான மருத்துவர்கள் அனுப்பப்பட உள்ளதாக கியூபா தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை கடுமையாக பாதித்துள்ள எபோலா நோய்க்கு எதிராக ஐ.நா. மருத்துவ குழுக்களையும், நிதி உதவிகளையும் அளித்து வருகிறது. இந்த நிலையில், கியூபாவிலிருந்து மருத்துவர்களை மேற்கு ஆப்பிரிக்காவிற்கு அனுப்ப உள்ளதாக ஐ.நா-விடம் கியூபா அரசு உறுதி அளித்துள்ளது.

முதற்கட்டமாக 165 மருத்துவ அதிகாரிகளும் 103 செவிலியர்களும் சியேரா லியோனுக்கு வந்தடைவார்கள் என்றும் இரண்டாவது கட்டமாக 296 பேர் கொண்ட குழுவையும் அனுப்பப் போவதாகவும் கியூபா அரசு சார்பில் அளித்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்