‘பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா தயார்’ ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் மோடி பேச்சு‘பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா தயார்’ ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் மோடி பேச்சு

ஐ.நா. பொதுச்சபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உகந்த சூழ்நிலையை உருவாக்கினால் காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருப்பதாக கூறினார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. 5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு 35 நிமிடங்கள் பேசினார்.

பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது. அதற்கான உகந்த சூழ்நிலையை அந்த நாடு உருவாக்க வேண்டும். காஷ்மீர் விவகாரம் போன்ற பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளில் எழுப்புவது பாகிஸ்தானுக்கு எந்த வகையிலும் உதவியாக அமையாது எனவும் கூறினார்.

ஆசிரியர்