போர்ச்சுகல்லின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்தோணியோ காஸ்டாவுக்குபோர்ச்சுகல்லின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்தோணியோ காஸ்டாவுக்கு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகல்லின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்தோணியோ காஸ்டாவுக்கு கிடைக்க உள்ளது; இவர், கோவா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.
போர்ச்சுக்கல் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான, சோஷியலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், அந்தோணியோ காஸ்டா, 52. ‘லிஸ்பன் காந்தி’ என இவர் மரியாதையாக அழைக்கப்படுகிறார். இவரின் தந்தை மற்றும் தாத்தா, தங்கள் வாழ்நாள் முழுவதும் கோவா மாநிலத்தில் வாழ்ந்தவர்கள்.கோவா மாநிலம் முன், போர்ச்சுக்கீசியர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது என்பதால், பல ஆண்டுகளுக்கு முன்பே இவரின் குடும்பம், போர்ச்சுக்கல் சென்று விட்டது. அந்தோணியோ காஸ்டா இப்போது, லிஸ்பன் நகர மேயராக உள்ளார். அடுத்த ஆண்டு இந்த நாட்டில் நடைபெற உள்ள பிரதமர் தேர்தலில், அந்தோணியோ காஸ்டா வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு முன், சோஷியலிஸ்ட் கட்சி ஆட்சியின் போது, அமைச்சராக இவர் இருந்துள்ளார்.
இவர்களின் குடும்பத்தினர், கவுட் சரஸ்வதி பிராமண ஜாதியை சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளுக்கு முன், போர்ச்சுக்கீசியர் ஆட்சியில், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை
தழுவியுள்ளனர்.

ஆசிரியர்