ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம் | பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன்ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம் | பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன்

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.

சைப்ரஸ் நாட்டில் உள்ள பிரிட்டிஷ் போர் விமான தளத்தை பார்வையிட்ட பின்னர் அவர் திடீரென ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்டார். கேமரூனின் ஆப்கன் விஜயம் குறித்த எந்த முன்னறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஈராக்கில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான வான்வழி தாக்குதலுக்கு சைப்ரஸில் அமைந்துள்ள போர் விமான தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விமான தளத்தில் வீரர்களை கேமரூன் சந்தித்து பேசிய பின்னர் ஆப்கன் தலைநகர் காபூல் வந்தார்.

ஆப்கனின் புதிய அதிபராக அஷ்ரப் கனியும், பிரதமர் பதவிக்கு இணையான தலைமை செயல் அதிகாரியாக அப்துல்லா அப்துல்லாபும்  பதவியேற்ற பின்னர் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு தலைவர் பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன். தலைநகர் காபூல் வந்து சேர்ந்த கேமரூன், அதிபர் அஷ்ரப் கனியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆசிரியர்